நெடுந்தீவில் நிர்வாக எல்லைக்குட்பட்ட கச்சதீவுப் பகுதியில் இம்மாத ஆரம்பத்தில் இரகசிய விஜயம் மேற்கொண்ட பௌத்த துறவிகள் குழுவால் பாரியளவில் பௌத்த விகாரையமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக கச்சதீவின் புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து 500 மீற்றர்கள் தொலைவில் மறைப்பு வேலிகள் அமைக்கப்பட்டு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கச்சதீவில் பாதுகாப்பு பகுதியாக பக்தர்கள் எவரும் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டுள்ள பகுதிக்குள்ளேயே குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதோடு எதிர்காலத்தில் குறித்த இடத்தில் பௌத்த விகாரையினை அமைத்து யாத்திரைத்தலமாக செயற்படுத்தும் திட்டமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்வசம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் குறித்த பெருநாள் தினத்திற்கு முன்னைய நாட்களில் குறித்த இடத்தில் நயினாதீவு பௌத்த விகாரையின் விகாராதிபதி தலைமையில் சென்ற பௌத்த துறவிகள் குழு வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.
பாரம்பரியமாக கிறிஸ்தவர்களின் யாத்திரைத்தலமான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் மட்டுமே கச்சதீவில் இருந்துவரும் நிலையில் இலங்கை, தமிழ் நாட்டு பக்தர்களால் வருடாந்தம் பெருமெடுப்பில் உற்சவம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதன் புனிதத்தை மறைக்கும் முகமாக குறித்த நடவடிக்கை இருப்பதாக கிறிஸ்தவ பாதிரியார்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை தமிழ் மக்களின் பூர்வீக நிலமெங்கும் பௌத்த ஆக்கிரமிப்பு மிகத் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவரும்; நிலையில் கச்சதீவுப் பகுதியும் பௌத்த மயமாக்கலுக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவில் வெடியரசன் கோட்டை என நம்பப்படும் புராதன கட்டட சிதைவுகளை பௌத்த சின்னங்களாக அறிவிப்புச் செய்யப்பட்ட விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்ட நிலையில் குறித்த சர்ச்சை முடிவதற்குள் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கச்சதீவில் புத்தசிலை நிறுவப்பட்ட செய்திகள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலர் எவ்.எக்ஸ். சுத்தியசோதியோடு தொடர்பு nhண்டு கேட்டபோது அவர் கச்சதீவில் இவ்வாறு புத்தர் சிலையமைப்பதற்கோ வேறு விகாரகைள் அமைப்பது தொடர்பிலோ எந்த அனுமதிகளும் பிரதேச செயலகத்தில் பெறப்படவில்லை எனத் தெரிவித்தார்.
TL