Home » கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சபம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! – வீடியோ

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சபம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்! – வீடியோ

Source
கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபம் நேற்று மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது. இம்முறை வருடாந்த கச்சை தீவு உற்சவத்திற்கு இலங்கை கடற்படை , இந்திய துணைதூதவராலயம், இலங்கையின வெளிவிவகார ஆமைச்சு ஆகியன முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளதோடு உற்சவம் சிறபாக ஆரம்பமாகியுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் யாழ்.மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபடவுள்ளது. இதன் பொழுது 60 நாட்டுபடகுகளிலிருந்தும் 16 இழுவை மடி படகுகளிலுமாக இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும் இலங்கையிலிருந்து இலங்கை கடற்படையினரின் படகுகள் மூலமும் ஏனைய தனியார் படகுகளிலிருந்தும் 2800 பக்தர்களும் மொத்தமாக பக்தர்கள் 4900 பேரும், அதிகாரிகள், வியாபாரிகள் 200 பேர் என மொத்தமாக 5100பேர் கச்சை தீவு பெருநாளில் கலந்து கொண்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை இலங்கை – இந்திய மீனவர்களுக்கிடையில் நீண்டநேர பேச்சுவார்த்தை ஒன்றும் கச்சதீவில் இடம்பெற்றிருக்கின்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை பணியினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வரும் அவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள், 20 வருடங்களாக உங்களுடன் பேசி வருகின்றோம். எந்தவித பிரியோசனமும் இல்லை எங்கள் நிலைமைகளை புரிந்து கொள்ளுங்கள் ஆக இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விடமாட்டோம் என தெரிவித்தனர். இதே நிலையில் ஒரு மீனவர் எமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கபடாவிடில் அமைச்சரதும் துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடபட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து கலந்துரையாடலை நிறைவுறுத்தினார். [embedded content] இதன் பொழுது இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,மன்னார் ,கிளிநொச்சி,யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர்கள், வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோன், பா.ஜ.க தமிழக மீனவ தலைவர் எம்.சி முனுசாமி உட்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். N.S
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image