கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் மார்ச் மாதம் 3 மற்றும் 4ஆம் திகதி இடம்பெறுவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாதசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வருடாந்த உற்சவம் மார்ச் மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக் கூட்டத்தின்போது இந்தியத் தூதரக அதிகாரிகள் ராம்மகேஸ் , பங்குத் தந்தை ஜெபரட்ணம் அடிகளாருடன் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி தென்னக்கோன் மற்றும் யாழ். மாவட்ட கடற்படைத் தளபதி, இராணுவத்தினர் மற்றும் பொலிசார் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
இதற்கமைய இம்முறை இடம்பெறும் கச்சதீவுத் திருவிழாவின்போது இலங்கை பக்தர்கள், இந்திய யாத்திரிகர்களும் பங்குகொள்ள அனுமதிக்கப்படவுள்ளனர்.
[embedded content]
மாவட்ட அரச அதிபர் உரையாற்றுகையில்,
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையில் விரும்பிய வகையில் செலவு செய்து ஆடம்பரமாக மேற்கொள்ள முடியவில்லை என்றார்.
இந்திய தூதரக அதிகாரி உரையாற்றுகையில், இம்முறை 3 ஆயிரத்து 5 ஆயிரம் வரையான இந்திய பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். இதற்கான நிதிச் செலவீனத்திற்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பையும் கொழும்பிற்கு அனுப்பி அதன் அனுமதியை பெற்று வழங்கும் என்றார்.

இம்முறை கச்சதீவு உற்சவத்திற்கு இலங்கையில் இருந்து 4 ஆயிரத்து 500 பேரும் அனுமதிக்கப்படுவர் என இதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான செலவீனமாக (சுமார்8 மில்லியன்) 7 மில்லியன் 915 ஆயிரத்து 700 ரூபா ஏற்படும் எனவும் கணக்கிடப்பட்டது.
TL