கச்சதீவு உற்சவத்திற்காக வருகை தந்த இந்திய இலங்கை மீனவர்கள் கச்சதீவு கடற்படை முகாமருகே பேச்சில் ஈடுபட்டபோதும் பேச்சில் ஈடுபட்டவர்கள் அரசியல்வாதிகள் என இந்திய மீனவர்களும் குற்றச் சாட்டுகின்றனர்.
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய உற்சவம் நேற்று இடம்பெற்ற சமயம் இலங்கை, இந்திய மீனவ பிரதிநிகளிற்கு இடையே ஒரு சுற்று பேச்சு இடம்பெற்றது. இந்த பேச்சில் ஈடுபடும் இலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் கட்சியில் வேட்பாளராக உள்ளவர்கள் என யாழில் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று கச்சதீவில் பேச்சு இடம்பெற்ற சமயம் இந்திய தரப்பில் கலந்துகொண்டவர்களும் ஆளும் பா.ஜ.க மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனரே அன்றி அவர்கள் கலந்துகொண்டமை மீனவர்களிற்கே தெரியாது என தேசிய பாரம்பரிய சங்கத்தைச் சேர்ந்த சேனாதிபதி சின்னத்தம்பி தெரிவித்தார்.
TL