இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் குறைந்த பக்தர்களுடனும் அதிக இந்திய யாத்திரிகர்கள் சகிதம் கச்சத்தீவு புனித அந்தோணியார் உற்சவம் இன்று ஆரம்பமாகியது.
கச்சத்தீவு புனித அந்தோணியாரின் வருடாந்த உற்சவத்திற்காக இம்முறை நீண்ட இடைவெளியின் பின்பு பல ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் கச்சதீவிற்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தபோதும் இன்றைய தினம் இலங்கையில் இருந்து சுமார் 3ஆயிரத்திற்கும் குறைவானோரும் இந்தியாவில் இருந்து 2 ஆயி்த்து 300 பேரும் வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த பக்தர்கள் சகிதம் கச்சதீவு உற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இவ்வாறு ஆரம்பமான உற்சவம் நாளை காலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[embedded content]
இதேநேரம் நாளை அதிகாலையும் இலங்கை பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
TL