கடந்த பத்து நாட்களில்இ கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, கடந்த 10 தினங்களில் அதிகரித்துள்ளதாக பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் தற்சயம் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் நான்காவது டோஸை பெறுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் அச்சுறுத்தல் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்திலும் முககவசங்களை அணிய வேண்டும்.
கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, குரங்கம்மை தொற்று ஒரு புதிய நோய் அல்ல, இது கடந்த 1970ஆம் ஆண்டு முதல் பதிவாகி வருகிறது. ஆயினும் இது தொற்றுநோயாக அறிவிக்கப்படவில்லை. இதன் பொதுவான அறிகுறிகள் முகம் மற்றும் வாய் பகுதிகளில் கொப்புளங்கள் உருவாகும்.
இந்த நோய் தொடர்பாக தேவையற்ற அச்சம் அடைய வேண்டாம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
