கடந்த மே மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறைகளுடன் தொடர்புடைய மூவாயிரத்து 500 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடு பூராகவும் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலக செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவாயிரத்து 500ற்கும் அதிகமானோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான 858 சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ளன. இந்த சந்தேகநபர்களில் ஆயிரத்து 200ற்கும் அதிகமானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
