கடன்மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை வெற்றியளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு தீர்க்கமான சூழ்நிலையினை எதிர்கொள்கின்ற போதும் அந்த சவாலை வெற்றி கொண்டு, நாட்டை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார். நாட்டிலுள்ள வர்த்தக சமூகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வர்த்தகர்களுக்குத் தேவையான சலுகைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு எதிhகாலத்தில் இலங்கைக்கு கிடைக்கும். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிடட் நிறுவனங்களின் கடன் உதவியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, நஷ்டம் ஈட்டும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காகவே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
