Home » கடன் மீள் கட்டமைப்புத் தொடர்பில் சீனா மற்றும் இந்தியாவுடன் இடம்பெறும் பேச்சவார்த்தைகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கடன் மீள் கட்டமைப்புத் தொடர்பில் சீனா மற்றும் இந்தியாவுடன் இடம்பெறும் பேச்சவார்த்தைகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Source
Share Button

கடன் மீள்கட்டமைப்புத் தொடர்பில் சீனாவுடனும் இந்தியாவுடனும் கலந்துரையாடல்களை விரைவில் நிறைவுக்குக் கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது வடக்கின் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. வடமாகாணத்திற்கான ஒரு அபிவிருத்தித் திட்டம் காணப்படுவதாகவும் இதில் பொருளாதார முன்னெற்றத்தை எட்டுவதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையாற்றும்போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, ஏற்கனவே பலரை விடுதலை செய்துள்ளதாகவும் ஒரு எழுத்தாளரை விடுதலை செய்வது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். காணாமற்போனவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image