கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருள் மானியம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்

மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் பற்றி கவனம் செலுத்தி, அவர்களுக்கு மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள் மானியம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதுபற்றி கடற்றொழில் பிரதிநிதிகளுடன் துரிதமாக பேச்சுவார்த்தை நடத்தத் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுபற்றி கருத்து வெளியிட்டார். நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழில் சமூக தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.
