Home » கடலில் மிதந்த கஞ்சாவை விற்பனை செய்தவர் தமிழகத்தில் கைது.

கடலில் மிதந்த கஞ்சாவை விற்பனை செய்தவர் தமிழகத்தில் கைது.

Source

கடலில் மிதந்த கஞ்சாவை எடுத்துச் சென்று உள்ளூரில் விற்பனையில் ஈடுபட்டவர்கள் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து இலங்க்கக்கு கடத்திய கஞ்சாப்பொதிகளை இலங்கை கடற்படையினரைக் கண்டதும் கடலில் தூக்கி எறிந்துவிட்டு இந்திய மீனவர்கள் தப்பி ஓடி விட்டனர். இவ்வாறு கடலில் போடப்பட்ட பொதிகள் அலையின் காரணமாக இந்தியத் திசை நோக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு கடலில் மிதந்த ஒரு சுமை கஞ்சாவினை இராமேஸ்வரத்தில் இருந்து கடற்றொழிலிற்கு வந்த பிறிதொரு படகில் பயணித்த மீனவர்கள் அவதானித்து அதனை எடுத்துச் சென்று சிறிது சிறிதாக பொதி செய்து 100 ரூபா வீதம் விற்பனை செய்ய முயன்ற சமயம் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு 30 கிலோ கஞ்சாவும் இராமேஸ்வரம் கியூ பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேநேரம் இந்த கஞ்சாவை கடலில் இருந்து கண்டு எடுத்த சமயம் மீனவப் படகில் 7 மீனவர்கள் இருந்தமையினால் எஞ்சிய ஆறு மீனவர்களையும் தேடி வருவதாகவும் கூறப்படுகின்றது.

TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image