இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் புத்தளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சந்தேகத்திற்கு இடமாகப் பயணித்த படகினை கடற்படையினர் வழி மறித்தபோதும் அப்படகு நிற்காது தப்பிச் சென்றுள்ளது.
படகினை கடற்படையினர் விரட்டிப் பிடித்துள்ளனர். படகில் மேற்கொண்ட தேடுதலின்போதே 8 கிலோ தங்கத்தை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
தங்கத்தினை கடத்திச் சென்ற இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.