Home » கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் உணவுப் பிரச்சனையை தீர்ப்பதற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களின் உணவுப் பிரச்சனையை தீர்ப்பதற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

Source
Share Button

கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை சாத்தியமாக்குவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சகலரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் அடுத்த வருடத்தில் உணவு நெருக்கடி ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. அதனை எதிர்கொள்வதற்கு சகலரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் கூறினார். உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்கு கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். அம்பாறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்தார். மக்கள் பட்டினியால் வாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி கூறினார்.

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான கூட்டு பொறிமுறையை அமுல்படுத்துவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தை அபிவிருத்தி அடைந்த வளமான மாவட்டமாக மாற்றுவதன் மூலம் உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. எதிர்வரும் போகங்களில் நெல் உற்பத்தியை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் நிலவும் விவசாயம் மற்றும் கடற்றொழில் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்றை நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image