இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளபோதும் பிற கட்சிகளின் வேட்பு மனுவில் போட்டியிடும் 16 பேரை ஏன் கட்சியில் இருந்து நீக்க கூடாது என விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிரந்தர உறுப்பினராக இருந்துகொண்டு பிற கட்சிகளில் போட்டியிடும் உறுப்பினர்களிடமே முதல் நடவடிக்கையாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்சியில் இருந்து விலக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் இராமலிங்கம் இராகிணி உட்பட 14 உறுப்பினர்களிற்கு கட்சியின் செயலாளரினால் இக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதியை சேர்ந்த உள்ளூராட்சி சபைகளில் தற்போது அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிற்கே கட்சியானால் இவ்வாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களிற்கு 14 நாள்களிற்குள் விளக்கமளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
TL