கண்டி எசல பெரகரா மற்றும் கதிர்காமம் பெரஹரா இன்று ஆரம்பம்

கண்டி எசல பெரஹரா உற்சவம் இன்று அதிகாலை சுபவேளையில் ஆரம்பமானது. முதலில் நாற்பெரும் தேவாலயங்களில் 5 பெரகராக்கள் இடம்பெறும். முதலாவது கும்பல் பெரஹரா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வீதிவலம் வரும். முதலாவது ரந்தோலி பெரஹரா அடுத்த மாதம் 7ஆம் திகதி வீதிவலம் வரும். இறுதி ரந்தோலி பெரஹரா அடுத்த மாதம் 11 ஆம் திகதி வீதி வலம் வர உள்ளது. அதனைத் தொடர்ந்து மாணிக்க கங்கையில் இடம்பெறும் தீர்த்தத்துடன் இந்த உற்சவம் நிறைவு பெறும் என ஸ்ரீதலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.
கதிர்காமம் தேவாலயத்தின் எசல பெரஹரா இன்று ஆரம்பமாகின்றது.
