கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளன

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் நீர் மட்டம் அதிகரித்திருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. களுகங்கை மற்றும் ஜின் கங்கையின் நீர் மட்டம் எச்சரிக்கைக்குரிய நிலையை அடைந்துள்ளன. நீர் நிலைகளை அண்;மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை அண்;மித்த நீர்த்தேக்கங்களின்; நீர்மட்டம் 90 வீதமாக உயர்வடைந்துள்ளதாகவும் திணைக்ளம் குறிப்பிட்டுள்ளது.
