யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கும் கனேடியத் தூதுவருக்கும் இடையில் இன்று ஓர் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
மாநகர சபை அலுவலகத்மில் இன்று மாலை 5 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது மாநகர சபையின் தற்போதை நிலவரம் நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் மாநகர சபை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலைமை தொடர்பிலும் மாநகர முதல்வர் கனேடியத் தூதுவருக்கு எடுத்து கூறினார்.
1983ஆம் ஆண்டு நிலைக்கு 13ஆம் திருத்தச் சட்டம் என ஒன்று உருப்படி இல்லாமல் கொண்டு வந்தபோதும் 36 வருடங்கள் பல வடிவங்களில் பல லட்சம் பேரின் இறப்பிற்குப் பின்பு அந்த 13ஐ பற்றியே பேசும் நிலையிலேயே கொழும்பு உள்ளது.
1990ஆம் ஆண்டு குடாநாட்டில் 1.1 மில்லியன் மக்கள் வாழ்ந்த இந்த மாவட்டத்தில் இன்று 700 ஆயிரம் மக்களே வாழ்கின்றனர். இருப்பினும் எமது மக்கள் 400 ஆயிரம் பேர் கனடாவில் வாழ்கின்றனர் அதற்கு இந்த நாட்டில் ஓர் திடமற்ற நிலையே காரணம்.
எதனை எடுத்தாலும் எதற்கு எடுத்தாலும் தன்னிடமே நாம் தங்கியிருக்க வேண்டும் என கொழும்பு எண்ணுகின்றது என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் கனேடியத் தூதுவரிடம் எடுத்துக் கூறினார்.
இச் சந்திப்பில் இலங்கைக்கான கனேடியத் தூதுவராக அண்மையில் நியமனம் பெற்ற தூதுவருடன் தூதரக அதிகாரிகளும் முதல்வருடன் மாநாகர ஆணையாளரும் கலந்துகொண்டனர்.
TL