முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் விபரத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் ஆணைக்குழு என்பன 6ஆம் திகதிக்கு முன்பு உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறு இன்று பணிக்கப்பட்டுள்ளது.
2023-03-09 அன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபைகளிற்கான வேடபுமனுத் தாக்கலின்போது முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துரைப்பற்று பிரதேச சபையில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிராகவே தமிழ் அரசுக் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றில் றிட் மனு கோரும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கரைத்துரைப்பற்றில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை நிராகரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை இரத்து செய்து வேட்பு மனுவை ஏற்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக்கோரி தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் மருந்துவர் ப.சத்தியலிங்கம், மருத்துவர் சிவமோகன் மற்றும் ஜெஜசீலன் ஜெயஈசன் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் சட்டத்த்ணிகளான டிவ்வியா நஸ்கம, கேசவன் சயந்தன், டிலான் கொரயா ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் ஆயராகினர்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மன்றில் நீதியரசர்களான பிரியந்த ஜெயவர்த்தன, குமுதினி விக்கிரமசிங்க, அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர் மனுதார்கள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த வைத்தியர் அவந்தி பெரேரா முன்னிலையானார்.
இதன போது மனுதாரர்கள் மனுவில் கோரியுள்ளது போன்றா வேட்பு மனுத்தாக்கலில் இடம்பெற்றது என நீதியரசர்கள் கோரியபோது அந்த விபரங்கள் அனுப்பி வைக்கப்படவில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் தெரிவிக்கப்பட்டமையினால் அதனை 6ஆம் திகதிக்கு முன்பு தேர்தல்கள் ஆணைக்குழுவும், தெரிவத்தாட்சி அலுவலரும் அனுப்பி வைக்க வேண்டும் என தொலைபேசி, தொலைநகல் மூலம் அறிவிக்குமாறும் வழக்கு 7 திகதி இடம்பெறும் எனத் திகதியிடப்பட்டது.
TL