Home » கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வார இறுதி ரெயில் சேவை இன்று முதல்

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான வார இறுதி ரெயில் சேவை இன்று முதல்

Source
Share Button

யாழ்ப்பாணம் – கொழும்பு விசேட புகையிரத சேவை இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்கிசையிலிருந்து காங்கேசன்துறைக்கு இரவு நேர நகர்சேர் கடுகதியே இவ்வாறு சேவையில் ஈடுபடவுள்ளது.
இந்த ரெயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அங்கிருந்து வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி, கொழும்பு, பொல்கஹவலை, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்;. பின்னர் அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு கோண்டாவில், சுன்னாகம் ஊடாக காங்கேசந்துறை ரெயில் நிலையத்தைச் சென்றடையும்.
அந்த ரெயில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து சுன்னாகம், கோண்டாவில் ஊடாக இரவு 10.25 மணிக்கு யாழ்ப்பாணம் ரெயில் நிலையத்தை; வந்தடையும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு கிளிநொச்சி, வவுனியா, அநுராதபுரம், குருநாகல், கம்பஹா, மருதானை ஊடாக கொழும்பு ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை தெஹிவளை, ஊடாக கல்கிசை ரெயில் நிலையத்தைச் சென்றடையும்.
கூடுதலான பயணிகள் தமது போக்குவரத்துத் தேவைக்காக ரெயில்களைப் பயன்படுத்துவதால் பல ரெயில் சேவைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ரெயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பில் இருந்து கண்டி வரை சொகுசு ரெயில் ஒன்று கடந்த புதன்கிழமை முதல் சேவையில் ஈடுபடுகின்றது.
இந்த ரெயில் ஒவ்வொரு நாளும் காலை 5.20ற்கு கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்பட்டுச் செல்லும். காலை 8.22ற்கு கண்டியைச் சென்றடையும். அங்கிருந்து மாலை 4.50ற்கு புறப்படும் இந்த ரெயில், இரவு 7.40ற்கு கொழும்பை வந்தடையும். இந்த ரெயிலில் முதலாம் வகுப்பிற்கான கட்டணம் ஆயிரத்து 300 ரூபாவாகும். இரண்டாம் வகுப்பிற்கான கட்டணம் 800 ரூபாவாகும்.
களனிவெளி ரெயில் பாதையில் வக ரெயில் நிலையத்தில் இருந்து கொழும்புக் கோட்டை வரையும் புதிய அலுவலக ரெயில் ஒன்று சேவையில் ஈடுபடுகின்றது. தினமும் காலை 6.20ற்கு வக ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 8.12ற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டையில்இருந்து புறப்படும் இந்த ரெயில் மாலை 5.43ற்கு வக ரெயில் நிலையத்தை சென்றடையும் என ரெயில்வேத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image