கல்வித்துறைக்கான சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

கல்வித்துறையில் ஏற்பட்ட தாமதங்களை கருத்தில் கொண்டு கற்பித்தல் நடவடிக்கையை விரிவான முறையில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தரமான கல்வி முறையுடன் முன்னோக்கிச் சென்று குறைபாடுகளையும், சிரமங்களையும் நீக்குவது இலக்காகும் என அமைச்சர் கூறினார். சர்வதேசத்துடனான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவசியமாகும். இதற்கென மனப்பாங்கு ரீதியான மாற்றங்கள் அவசியம் என்றும் அமைச்சர் கூறினார்.
