கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை இதற்காக விண்ணப்பிக்க முடியும். ஒன்லைன் முறையில் மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவி;த்துள்ளார். பாடசாலை மூலமான பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபர் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனித்தனியாகவும் இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். றறற.னழநநெவள.டம அல்லது றறற.ழடெiநெநஒயஅள.பழஎ.டம என்ற இணையத்திற்குச் சென்று உரிய வழிகாட்டல்களை சரியான முறையில் வாசித்ததன் பின்னர் இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும்.