கல்வி மறுசீரமைப்பிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 1400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இலங்கையில், அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் கல்வி மறுசீரமைப்பிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆயிரத்து 400 மில்லியன் ரூபாவினை வழங்கவுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக அரச சேவையில் இணைத்துக்; கொள்ளப்பட்டுள்ளவர்கள் உட்பட பட்டதாரிகளை;, ஆசிரியர் சேவைக்கு விரைவில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கஷ்டப்பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இதன்மூலம் நிரப்புவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
