கல்வி மறுசீரமைப்பு முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பம்

கல்வித்துறையில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தரம் ஐந்து, தரம் பத்து ஆகிய வகுப்புக்களை அடிப்படையாக வைத்து, இந்த வேலைத்திட்டம் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. பாடசாலையில் கற்கும் கல்வியை நடைமுறை ரீதியாக பயன்படுத்தக் கூடியவாறு மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அவசியம் என்று அமைச்சர் கூறினார். 19 கல்வியியற் கல்லூரிகளையும் இணைத்து, பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
