காங்கேசன்துறை காரைக்கால் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ள நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் தங்ககம் மற்றும் குடிவரவு குடியகல்வுப் பணிகளிற்கான அலுவலகம் மிகத் துரிதமாக அமைக்கப்படுகின்றது.
ஏப்பிரல மாதம் 29 ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதனால் இதற்கான அலுவலகங்களை அமைப்பதற்காக 144 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசினால் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேநேரம் துறைமுகப் பகுதியில் கடலை ஆழப்படுத்தி பெரும் கப்பலை உள்ளே வரும் பணியை மேற்கொள்ள 2016இல் இந்திய அரசு 43 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க இணங்கியது. இருந்தபோதும் அப் பணியை மேற்கொள்ள தற்போதைய சூழலில் மேலும் 16 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே தற்போது 120 பேர் மட்டுமே பயணிக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக பயணிகள் போக்கு வரத்து முனையம் கடற்படையினரால் துரிதமாக அமைக்கப்படுகின்றது.
இதேநேரம் இம்மாதம் 29 ஆம் திகதி கப்பல் சேவை இடம்பெறும் என அமைச்சர் நிமால் சிறிபாலடீசில்வா உட்பட்டோர் தெரிவித்து பணிகள் வேகமாக இடம்பெற்றாலும் அதன் பணிகள் இம்மாதம் 29ஆம திகதிக்கு முன்பு பூர்த்தி செய்யப்படும் எனபதனை உறுதி செய்ய முடியவில்லை.
TL