Home » காணாமல்போனோர் விடயத்தை செஞ்சிலுவை சர்வதேச குழு கையாளும்

காணாமல்போனோர் விடயத்தை செஞ்சிலுவை சர்வதேச குழு கையாளும்

Source

செஞ்சிலுவை சர்வதேச குழுவை  மீண்டும் இலங்கையில் ஆரம்பிப்பதற்கான பச்சைக் கொடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா காண்பித்துள்ளார்.

இலங்கையில் காணாமல்போனோர் விவகாரம் பெரும் பூதாகாரமாகவே இருக்கும் நிலையில் அதனை சர்வதேச ஒத்துழைப்புடன் மட்டுமே முன்கொண்டு செல்ல முடியும் என காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.

இதேநேரம் குறித்த விடயம் ஐ.நா அமர்வுகளிலும் தொடர்ச்சியாக முன் வைக்கப்படும் ஓர் குற்றச் சாட்டாக இருப்பதோடு தற்போது ரணில் அரசுடன் தமிழ்க் கட்சிகள் பேச்சின்போதும் மிகவும் இறுக்கமான விடயமாக முன்கொண்டு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இவற்றின் காரணமாக இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் செயல்பட்ட தொண்டு நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கையில் இயங்க அனுமதி வழங்கி அதன் மூலம் காணாமல்போனோர் பதிவை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதோடு இதற்கான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image