மன்னார்- பூநகரியில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மூலமான திட்டத்துக்கு பொதுமக்கள் வெளியிடும் எதிர்ப்புக்கான காரணங்களைக் கண்டறிந்து அதனைப் நிவர்த்தி செய்த பின்னரே அந்தத் திட்டத்தை செயற்படுத்தவேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள மேற்படி செயற்றிட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைக்கொள்ளப்போகின்றது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
‘மக்கள் சுற்றுச்சூழல் தொடர்பான கரிசனைகளை முன்வைத்துள்ளனர். அது தொடர்பில் கவனமெடுத்து அதனைத் தீர்த்து வைக்கவேண்டும். அதன் பின்னரே திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
TL