இலங்கையின் பல முக்கிய நகர்ப்புறங்களில் காற்றின் தரம் இன்று காலை மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 08.00 மணி நிலவரப்படி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய இடங்களில் முறையே 151 மற்றும் 140 என காற்றின் தர சுட்டெண் கொண்டுள்ள நிலையில் இது அதிகபட்ச காற்று மாசுபாடு பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காற்றின் தரக் குறியீடு கண்டி 120 ஆகவும், குருநாகல் மற்றும் புத்தளம் தலா 117 ஆகவும், கொழும்பு 111 ஆகவும் பதிவாகியுள்ளன. அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் பொலன்னறுவை ஆகியவை காற்றின் தரக் குறியீடு 106, 103 மற்றும் 97 ஆக பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், நேற்றைய தினத்தை விட இலங்கையில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி, பல பகுதிகளில் காற்றின் தரம் 100- 150 என்ற அளவில் உள்ளது.
யாழ்ப்பாணம் (79), களுத்துறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்கள் 100 க்கும் குறைவான மட்டங்களைக் காண்பிக்கிறது.
இந்த நிலைமை அடுத்த 2 நாட்களுக்கு நிலவும் எனவும் அதன் பின்னர் முன்னேற்றம் ஏற்படும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
N.S