காலஞ்சென்ற பாடகரான நிஹான் நெல்சனுக்கு தேசிய வானொலி கௌரவம்

காலஞ்சென்ற பாடகரான நிஹான் நெல்சனுக்கு தேசிய வானொலி கௌரவமளிக்க இருக்கின்றது. அன்னாரின் பூதவுடல் இன்று முற்பகல் பத்து மணி தொடக்கம் பகல் ஒரு மணி வரை இறுதி அஞ்சலிக்காக தேசிய வானொலியின் வைக்கப்பட இருக்கின்றது. இறுதிக் கிரியைகள் மொறட்டுவ, ராவத்தாவத்தையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. சிங்கள பாடல் துறையில் சிறந்த பாடகராக கருதப்படும் நிஹால் நெல்சன், தனது 76 ஆவது வயதில் காலமானார்.
