Home » காலநிலை மாற்றம் குறித்த தலைமை செயலகத்தை அமைக்கும் ‘வர்த்தமானி’ ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு!

காலநிலை மாற்றம் குறித்த தலைமை செயலகத்தை அமைக்கும் ‘வர்த்தமானி’ ஒரு வாரத்தில் அமைச்சரவைக்கு!

Source

காலநிலை மாற்றம் தொடர்பான தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒரு வாரத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பானசிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தை இலங்கை எவ்வாறு எதிர்கொள்கிறது மற்றும் எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்பது தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிப்பதற்காக காலநிலை மாற்ற பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எகிப்து விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

N.s

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image