Home » காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் இன்று பகல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – எச்சரிக்கை

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் இன்று பகல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் – எச்சரிக்கை

Source
Share Button

.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் இன்று பகல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காலியில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற் பிராந்தியங்களில் காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும். குறித்த பகுதிகளில் கடல் அலை; 3 மீற்றர் உயரத்துக்கு மேல் எழக்கூடும்.

இதேவேளை, காலி, புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற் பிராந்தியங்களில் காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம்.

குறித்த பகுதிகளுக்கு தொழிலுக்கு செல்லும் மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image