Home » கியூ.ஆர்.முறைமையின் கீழ் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடத்திட்டம்

கியூ.ஆர்.முறைமையின் கீழ் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடத்திட்டம்

Source
Share Button

கியூ.ஆர்.முறைமைக்கு அமைய புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதி அவசியம் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் ஐந்து லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு கொள்வனவுக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அவை விநியோகிக்கப்படவுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விரைவில் சாரதி அனுமதிப் பத்திரத்தினை வழங்க திணைக்களம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அம்பாறை, மாத்தறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஒன்லைன் முறை ஊடாக அனுமதிப் பத்திரத்திற்கான பதிவுகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image