Home » கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் கிராமிய உணவுப் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் கிராமிய உணவுப் பாதுகாப்புக் குழுக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

Source
Share Button

கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் கிராமிய உணவுப் பாதுகாப்புக் குழுக்களை சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஸ்தாபிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை வெற்றி அளித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஒத்துழைப்புடன் அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.

எதிர்வரும் மாதங்களில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடிக்கு முன்கூட்டியே தயாராவது இதன் நோக்கமாகும். நாட்டின் எந்த நிலைக்கு மத்தியிலும் போதுமான உணவை நியாயமான விலையில் மக்களுக்கு பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் அந்நியச் செலாவணியை சேமிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image