கிராம அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படும் என பிரதமர் தெரிவிப்பு

கிராம அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கிராம அதிகாரிகளின் தொழிற் சங்கத்தினர் தங்களது பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகளை எழுத்துமூலம் பிரதமரிடம் சமர்ப்பித்தனர். இதன்போது, அவற்றின் உள்துறையை செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு தாம் முன்னிற்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
தற்போது, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு கிராம அலுவலர்களின் ஒத்துழைப்பு அவசியம். கோரிக்கைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வெற்றியடையச் செய்யவதற்கு அமைச்சர்கள் குழுவில் கலந்துரையாடுவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.
