கிளிநொச்சியில் நகை கடை கொள்ளையுடன் தொடர்புபட்டு இந்தியாவிற்கு அகதிப் பெயரில் தப்பியோடிய இருவரை நாடுகடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தமிழகத்திற்கு அகதிகளாகச் செல்லும் நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கையில் தொடர்புபட்ட இருவரும் தமிழகத்திற்கு தப்பி ஓடியுள்ளதனால் இருவரையும் கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் தமிழக பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து தமிழகம் சென்ற இரு குடும்பஸ்தர்களும் தமிழகம் மரையன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
TL