யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக மாற்றுவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
கிளிநொச்சி வளாகம் புலிகளின் பயன்பாட்டில் இருந்தது.இராணுவம் கிளிநொச்சியை விடுவித்த பின்னர் தமது முகாமாக மாற்றிக்கொண்டனர். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தி அதனை பல்கலைக்கழகத்துக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம்.
அங்கு நான்கைந்து வளாகங்கள் வந்துள்ளன. கிளிநொச்சி வளாகத்தை கிளிநொச்சிப் பல்கலைக்கழகமாக விரைவில் மாற்றித் தருவோம் என்றார்.