கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய பிரதேச மக்களின் போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்கும் முகமாக இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முயற்சியில் போக்குவரத்து அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய மட்டக்களப்பில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளின் பெயரில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது கிழக்கு மாகாண தனியார் மற்றும் அரச பேருந்துக்களின் சேவையை வினைத்திறனுடன் முன்னெடு ப்பதற்கும் மற்றும் ஏனைய மாகாணங்களில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு வரும் போக்குவரத்து சேவையில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்குரிய தீர்வுகளை விரைவாகப் பெற்றுக் கொள்ளவும் இந்த கலந்துரையாடல் முன்னெடுக் கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச போக்குவரத்து தனியார் போக்குவரத்து சேவைகளில் இருக்கின்ற நாளாந்தம் வருகின்ற பிணக்குகளை தீர்த்தல், கிழக்கு மாகாணத்தில் ஏனைய மாகாணங்களில் போக்குவரத்தில் இருக்கின்ற பிணக்குகளை நாம் இனம் கண்டு மாவட்ட மட்டத்தில் கலந்து தீர்வு காணல், போக்குவரத்து சேவையின் போது பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளையும் கிராம மட்டத்தில் அவர்களது போக்குவரத்து சேவை உரிய முறையில் இடம்பெறுகின்றதா என்பதனை அவதானித்தல், ஏற்படுகின்ற பிணக்குகளை பொலீசாரின் உதவியுடனும், ஏனைய பிணக்குகளை சட்டரீதியாக அணுகுவதற்கும் தேவையான கலந்துரையாடல்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்ப உள்ளது
இலங்கை போக்குவரத்து சபை தலைவர், போக்குவரத்து அதிகார சபையின் கிழக்கு மாகாண தலைவர், போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண இயக்க நிலை பணிப்பாளர், தனியார் போக்குவரத்து சபை பணிப்பாளர், கிழக்கு மாகாண போக்கு வரத்து அதிகார சபை உதவி பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், அரச போக்குவரத்து தனியார் போக்குவரத்து உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
AR
[embedded content]