குரங்கு அம்மை நோய்த் தொற்றைக் கருத்திற்கொண்டு சுகாதார அவசரநிலை பிரகடனம்

மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய்த் தொற்றைக் கருத்திற்கொண்டு உலக சுகாதார ஸ்தாபனம் பொதுச் சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நோய் குறித்த ஒரு நாட்டிலோ அல்லது பிராந்தியத்திலோ மாத்திரம் பரவக்கூடியதல்ல என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோ அதனம் கெப்ரியஸ் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. இதுவரை 58 நாடுகளில் சுமார் மூவாயிரத்து 500 பேர் இந்த நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனம் நடத்திய கூட்டத்தின் போதே பொதுச் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
