இலங்கையிலுள்ள குரங்கொன்றுக்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தப்போவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கே கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பதற்கும், அதனைச் சீனாவுக்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவினங்களையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குரங்குகளைப் பிடித்து, அதனைத் தனிமைப்படுத்தி, நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, கூடுகளில் அடைத்து, சீனாவுக்கு கொண்டு செல்வதற்கான முழுச் செலவையும் சீனாவே ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
TL