குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான உதவித்திட்டம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு உதவி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப் படவிருக்கிறது. திறைசேரி ஊடாக இந்த வேலைத்திட்டம் நடமுறைப்படுத்தப்படவிருக்கிறது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியும் இதற்கு கிடைக்கும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியொடு கடந்த மே மாதம் தொடக்கம் யூலை மாதம் வரை ஐயாயிரத்து 139 கோடி ரூபா நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 32 லட்சம் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.
இதேவேளை, சில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் நெல் கொள்வனவு நடவடிக்கை தாமதமடைந்தள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். போதியளவிலான நிதி வழங்கப்பட்டிருந்தும் நெல்லை கொள்வனவு செய்யாமை கவலைக்குரியதாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
