இலங்கைக்கு கூடுலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் தொழில் சங்கங்கள் ஈடுபடத் தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இது பற்றிக் கருத்து வெளியிட்டார். ஆபத்தான சகல சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பாதுகாத்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.