கேசைக் கொண்டு வரும் மேலும் 6 கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளன

.
கேஸைக் கொண்டு வரும் ஆறு கப்பல்கள் விரைவில் நாட்டை வந்தடையவுள்ளன. மற்றுமொரு கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. இதேவேளை, நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து கேசை இறக்கும் பணி பூர்த்தியாகியுள்ளது. கேஸ் நிரப்பப்பட்ட ஒரு லட்சம் சிலிண்டர்கள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு தவிர ஏனைய பிரதேசங்களுக்கு 75 ஆயிரம் சிலின்டர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
