இன்று நள்ளிரவு முதல் வீட்டு எரிவாயு விலை குறைக்கப்படுகிறது. அதன்படி, 12.5 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை ஆயிரத்து ஐந்து ரூபாவினால் குறைக்கப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, அதன் புதிய விலை மூவாயிரத்து 728 ரூபாவாகும்.
ஐந்து கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 402 ரூபாவினால் குறைவடைகிறது. அதன்படி, அதன் புதிய விலை ஆயிரத்து 502 ரூபாவாகும்.
2.3 கிலோ கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 183 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 700 ரூபாவாகும் என நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடையுமானால், வீட்டு எரிவாயு விலையை சுமார் ஆயிரத்து 500 ரூபாவால் குறைக்க நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது.