Home » கேஸ் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது – தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்

கேஸ் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது – தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்

Source
Share Button

எரிபொருள் விலைகளுக்கு அமைய, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்திற்கு அமைய, எரிபொருளின் விலையை அதிகரிக்கவோ, அல்லது குறைக்கவோ நேரிடும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.மாப்பா பத்திரண தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எண்ணெய் விலை உட்பட மேலும் பல தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை குறித்த விலை சூத்திரத்திற்கு அமைய, விலையில் மாற்றம் செய்யப்படும்.

இதனிடையே, இலங்கைக்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவது தொடர்பில் இந்தியா கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் தற்சமயம் கலந்துரையாடல் இடம்பெறுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது. இலங்கை முகம்கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியா இதுவரை இலங்கைக்கு 350 கோடி டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேஸை ஏற்றிய கப்பலுக்கான கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மூவாயிரத்து 900 மெற்றிக் தொன் கேஸை தரையிறக்கும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கேஸ் சிலிண்டர்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டு, விநியோகிப்பதற்கு மேலும் சில தினங்கள் செல்லும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image