12 தசம் 5 கிலோ கிராம் எடைகொண்ட கேஸ் சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் 100 ரூபாவினால் குறைக்கப்படும் என்று லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். விலை திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளது. ஐந்து, இரண்டு தசம் 3 கிலோ கிராம் எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களி;ன் விலைகளும் திருத்தப்பட இருக்கின்றது. நுகர்வோருக்குச் சிரமம் இன்றி சலுகை விலையில் கேஸை வழங்குவது லிற்றோ நிறுவனத்தின் இலக்காகும் என்றும் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.