கைத்தொழில் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு

வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுவதற்காக உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் காணப்படும் வாய்ப்புக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கைத்தொழில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டார். நீண்டகாலமாக அமுலில் இருக்கும் சட்டங்கள் முதலீடுகளுக்குத் தடையாகவுள்ளன. முதலீடுகளை ஊக்கவிப்பதற்காக புதிய மூலோபாயங்களை கடைப்பிடித்து, கைத்தொழில் துறையின் முன்னெற்றத்திற்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் கைத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் விரிவாகக் கலந்துiயாடப்பட்டன. ஏற்றுமதி கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்டு ஈட்டப்படும் வெளிநாட்டுச் செலாவணியை நேரடியாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
