கொக்கட்டிச்சோலை படுகொலை தின நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள தூபியில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் அனுஸ்டிக்கப்பது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலான நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.
இதன் போது முன்னா கிழக்கு மாகாசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வவுணதீவு பிரதேச சபைப் பிரதித் தவிசாளர் செல்லத்துரை உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டிலும் குறித்த நினைவேந்தல் மேற்கொள்ளப் பட்டிருந்தது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, கொக்கட்டிச்சோலை பிரதேச சபைத் தவிசாளர் புஸ்பலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது ஈகைச் சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
AR