நலன்புரி கொடுப்பனவுகளை பெறுவதற்காக கிடைக்கப்பெற்ற 22 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களின்; தகவல்களை உறுதிப்படுத்தும் பணி நிறைவு செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை இதற்காக, விண்ணப்பிக்காதவர்கள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முனனர் விண்ணப்பிக்க முடியும். குறித்த தினத்திற்கு முன்னர் தகவல்களை வழங்காவிடின் அவர்களுக்கு நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த செயற்;றிட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாடளாவியரீதியில் 340 பிரதேச செயலக பிரிவுகளிருந்து கிடைக்கப்பெற்ற 37 லட்சம் விண்ணப்பங்களிலுள்ள தகவல்களை பரிசீலிக்கும் நடவடிக்கையினை விரைவு படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.