Home » கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் ; மருதானையில் கடும் வாகன நெரிசல்

கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம் ; மருதானையில் கடும் வாகன நெரிசல்

Source

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடலான ‘அறகலய’ இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் குழுவினர் இன்று மாலை ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியுள்ளதுடன் ஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை சந்தியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று இந்த பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராளிகள் குழுவினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பேரணி இன்று பிற்பகல் 03 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமானத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பேரணி சென்றுக்கொண்டுள்ளது.

போராட்டத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கவில்லை.

என்றாலும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளன.

1 ஐக்கிய மக்கள் சக்தி
2 தமிழ் தேசிய கூட்டமைப்பு
3 சோசலிஸ்ட் கட்சி
4 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
5 நிதாஹஸ் ஜனதா சபாவா
6 43 ஆவது படையணி
7 ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி
8 தமிழ் முற்போக்கு கூட்டணி
9 புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி
10 அனுர பிரியதர்ஷன சந்திம வீரக்கொடி உள்ளிட்ட அணி
11 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
12 அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
13 சோசலிஸ்ட் கட்சி

நிறுவனங்கள்/சங்கங்கள்

1 இலங்கை ஆசிரியர் சங்கம்
2 பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான சபை
3 இலங்கை வங்கி ஊழியர் சங்கம்
4 இளம் வழக்கறிஞர்கள் சங்கம்
5 இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்
6 தொழிலாளர் போராட்ட மையம்
7 ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு
8 ஐக்கிய பெண்கள் சக்தி
9 ஊடக தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
10 காலி முகத்திடல் எதிர்ப்பாளர்கள்
11 இலங்கை தோட்ட சேவைகள் சங்கம்
12 தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம்
13 யுதுகம லங்கா
14 ஃபேக்சிஸ் கலெக்டிவ்
15 மக்கள்வர்த்தக மையம்
16 Frotect அமைப்பு
17 பிரகதி ஆசிரியர் சங்கம்
18 ஒருங்கிணைந்த வளர்ச்சி அலுவலர் மையம்
19 அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
20 ஐக்கிய தொழிற்சங்கப் பிரிவு
21 அரசு குடும்ப சுகாதார சேவைகள் சங்கம்
22 ஐக்கிய சுகாதார பணியாளர்கள் சங்கம்
23 ஒருங்கிணைந்த ஆசிரியர் சேவை சங்கம்
24 தேசிய மற்றும் மாகாண பொது முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் கூட்டமைப்பு
25 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
26 ஒருங்கிணைந்த பொறியியல் கழக ஊழியர் சங்கம்
27 அச்சுப்பொறிகளின் ஒன்றியம்

இந்த கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதற்றவாக கையொப்பமிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தக்க 150 இற்கும் அதிகமான அமைப்புகள் போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image