கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் அல்ல ஒடிசி என்ற ரெயிலின் சேவை நீடிக்கப்பட்டிருக்கின்றது

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் அல்ல ஒடிசி என்ற ரெயிலின் சேவை நீடிக்கப்பட்டிருக்கின்றது. நாளை தொடக்கம் வாரத்தில் வியாழக்கிழமை நாட்களில் அதிகாலை 5.30ற்கு இந்த ரெயில் பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாக ரெயில்வே பிரதிப் பொதுமுகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே எமது நிலையத்திற்குத் தெரிவித்தார். இந்த ரெயில் பதுளையில் இருந்து வெள்ளிக்கிழமை முற்பகல் 9.50ற்கு கொழும்பிற்கான பயணத்தை ஆரம்பிக்கும். அல்ல ஒடிசி என்ற ரெயில் இதற்கு முன்னர் வார இறுதிநாட்களில் மாத்திரம் ரெயில் பயணங்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
