கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று முதல் மீண்டும் இயங்கும். அதன்படி, விசா மற்றும் பிற சேவைகளுக்கான வழக்கமான செயல்பாடுகளை இந்த அலுவலகம் இன்று ஆரம்பிக்கும் என இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, விசா விண்ணப்ப மையம் கடந்த வாரம் தற்காலிகமாக மூடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.